இந்தத் தருணமே… இப்போதே! நாளை அல்ல… நாளை என்பது மிகத்தாமதம்! ஹியூகோ சாவேஸ் எனும் இணையற்ற நாயகனின் வார்த்தைகளே இவை.
மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கியது.