எனது வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்..!
உழைப்பின் பலன் பொங்க
உள்ளத்துள் உவகை பொங்க
உலையில் பால் பொங்க
உதிப்பதுதான் தைப்பொங்கல்.
ஆனால்...
திசைதோறும் தீவிரவாதம்
திளைத்துப்பொங்கி
தெருவெங்கும் குண்டுகள்
வெடித்துப் பொங்கி
வஞ்சமும் லஞ்சமும்
வழிந்து பொங்கி
வலம் வரும் நாளில்...
வக்கற்ற மக்களுக்கு
இவ்வாண்டில் பொங்கல் மலரட்டும்...!
அன்புடன்.
தோழர் குமரன்.