செவ்வாய், 14 நவம்பர், 2017

இது போதும் எனக்கு - வைரமுத்து


அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை

இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்

கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்

இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்

நீ பாடும் கீதம்

இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு

உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு

நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எதுவேண்டும் எனக்கு?

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

யா/யூனியன் கல்லூரி - 2002 O/L, 2005 A/L மாணவர்கள் ஒன்றுகூடல் - 2013



யா/யூனியன் கல்லுாரித் தாயின் குழந்தைகளாகிய நாங்கள் பல வருடங்களாக ஒன்று கூட முடியாமை காரணமாக நாங்கள் ஒன்று கூட எத்தணித்துள்ளோம். இங்கு பாடசாலை நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் தற்போதைய நடவடிக்கைகள் தொடபர்பாக கலந்துரையாட உள்ளமையால் 2002 O/L, 2005 A/L மாணவா்களை தவறாது கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புன் வேண்டிநிற்கின்றோம்.  

காலம் - 20.10.2013
நேரம் - காலை 10.00 மணி
இடம் - யா/யூனியன் கல்லுாரி மண்டபம்


வியாழன், 18 ஜூலை, 2013

தசாப்தங்கள் கடந்த வாலிபக் கவிஞர் வாலி ஒரு அற்புத பாடலாசிரியர்

தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று(ஜூலை 18ம் தேதி) மாலை காலமானார். 

சனி, 13 ஏப்ரல், 2013

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்..!


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்..!
நாளைய வாழ்க்கை என்னும்
புது பாதையில்…
புதிய எண்ணங்கள்
புதிய நண்பர்கள்
புதிய முயற்சிகள்
புதிய நம்பிக்கைகள்
புதிய திட்டங்களை சேர்த்து
சோர்விலா செயல்கள்
என்னும் தீயை மூட்டி
மலரட்டும்புது வாழ்வு …!

அன்புடன்.
குமரன்.

புதன், 6 மார்ச், 2013

வெனிசுவேலா அதிபா் தோழர் ஹ்யூகோ சாவேசுக்கு செவ்வஞ்சலிகள்


இந்தத் தருணமே… இப்போதே! நாளை அல்ல… நாளை என்பது மிகத்தாமதம்! ஹியூகோ சாவேஸ் எனும் இணையற்ற நாயகனின் வார்த்தைகளே இவை.

மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கியது.

புதன், 13 பிப்ரவரி, 2013

யா/ யூனியன் கல்லூரி - தெல்லிப்பழை வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி - 2013

யா/ யூனியன் கல்லூரி - தெல்லிப்பழை வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி - 2013


இடம் : யூனியன் கல்லூரி மைதானம், தெல்லிப்பழை
நாள்   : 16.02.2013

நேரம்: மதியம் 1.00 மணி

இது போதும் எனக்கு - வைரமுத்து

அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் இதுப...