வியாழன், 20 டிசம்பர், 2012

2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என்பது வெறும் கட்டுக்கதை..! - நாஸா



2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழிவடையும் என்ற வதந்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான “நாசா” மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பூமிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்நிறுவனம் திட்ட வட்டமாகக் கூறியுள்ளது.
பூமி மூன்று நாட்களுக்கு இருளடையும் என்ற கருத்துக்களுக்கோ, பூமியின் மீது விண்கற்கள் மோதும் என்பதற்கோ எவ்விதமான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களும் இல்லையென்றும், அவ்வாறான பாரிய அசம்பாவிதங்கள் தொடர்பான கதைகள்யாவும் கற்பனையில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் என்றும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாயன் நாள்காட்டி மீண்டும் ஜனவரி மாதம் முதலாம் திகதியுடன் மற்றுமொரு நீண்ட காலப் பகுதிக்கு நிலைத்திருக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
உலகம் அழியுமா என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் தோன்றியிருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு நாசா நிறுவனம் அளித்திருக்கும் பதில்களின் விபரங்கள் வருமாறு,
கேள்வி: 2012ஆம் ஆண்டில் பூமிக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படலாமா? பல இணையத்தளங்கள் 2012 டிசம்பர் மாதத்தில் உலகம் அழிவடையுமென்று கருத்துத் தெரிவித்துள்ளன?
பதில்: உலகம் 2012 இல் அழிவடையப்போவதில்லை. எங்கள் பூமி நான்கு பில்லியன் வருடங்களுக்கு மேலாக மிகவும் பாதுகாப்பாக இருந்து வருகின்றது. உலகின் முன்னணி விஞ்ஞானிகள் 2012ல் உலகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை தெரிவிக்கவில்லை.
கேள்வி: 2012ஆம் ஆண்டில் உலகம் அழிவடையும் என்று தீர்க்கதரிசனம் சொன்னதற்கான பின்னணி என்ன?
பதில்: சுபநேரியன்கள், நிபிரு என்ற விண்கோள் ஒன்றை கண்டுபிடித்ததையடுத்தே இந்த உலகம் அழிவுறும் கதை ஆரம்பமானது. இந்த விண்கோள் உலகத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள். இத்தகைய அனர்த்தம் பூமிக்கு ஏற்படும் என்று 2003 மே மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
அன்று எவ்வித அழிவும் உலகத்துக்கு ஏற்படாத காரணத்தினால் உலகம் அழியும் என்ற காலக்கெடு 2012 டிசம்பர் மாதத்துக்கு பின்போடப்பட்டது. பண்டைய மாயன் நாள்காட்டிக்கு அமைய உலகம் 2012 மாரி காலத்தில் அழியும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் மூலமே 2012 டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என்று அறிவிக்கப்பட்டது.
கேள்வி: மாயன் நாள்காட்டி 2012 டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறதா?
பதில்: உங்கள் சமயல் அறை சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் மாயன் நாள் காட்டியைப் போன்று உலகம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அழியப்போவதில்லை. மாயன் நாள்காட்டியும் 2012 டிசம்பர் 21ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதும் இல்லை. இந்தத் திகதி மாயன் நாள்காட்டியின் நீண்டகாலத்தை நிறைவு பெறுவதை எடுத்துக்காட்டுகின்றபோதிலும், மாயன் நாள்காட்டி மீண்டும் ஜனவரி மாதம் 1ஆம் திகதியன்று ஆரம்பமாகும். இதன்மூலம் மீண்டும் ஒரு நீண்ட காலப்பகுதிக்கு மாயன் நாள்காட்டி நிலைத்திருக்கும்.
கேள்வி: டிசம்பர் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரையான காலப்பகுதியில் பூமி முழுமையாக இருளில் மூழ்கும் என்று நாசா அமைப்பு அறிவித்துள்ளதா?
பதில்: நாசா அமைப்போ உலகில் எந்த விஞ்ஞான அமைப்போ இவ்விதம் பூமி இருளில் மூழ்கும் என்று அறிவிக்கவில்லை. அண்டவெளியில் கோள்கள் ஏதோ ஒரு வகையில் இணையும்போதே பூமி இருளில் மூழ்கும் என்று கூறப்படுகிறது. அப்படியான எந்தவித இணைவும் அண்டவெளியில் கோள்களுக்கிடையில் ஏற்படப்போவதில்லை.
கேள்வி: இப்படியான அனர்த்தத்துக்கு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று நாசா அமைப்பின் நிர்வாகி சார்ள்ஸ் போல்டன் தெரிவித்திருப்பதாக வதந்திகள் பரவுகின்றனவே?
பதில்: மக்கள் எவ்வித ஆபத்தை எதிர்நோக்குவதற்கும் தயார் நிலையில் இருப்பதற்காகவே இந்த செய்தி விடுக்கப்பட்டது. அரசாங்கமும் எதற்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்ற போதிலும், பூமி இருளில் மூழ்கும் என்று என்றுமே அறிவிக்கவில்லை.
கேள்வி: விண்வெளியில் கோள்கள் ஒன்றிணைவதனால் பூமிக்கு தாக்கம் ஏற்படுமா?
பதில்: அடுத்த பல தசாப்தங்களுக்கு விண்கோள் ஒன்றிணையப் போவதில்லை. இவ்விதம் ஒன்றிணையும் சந்தர்ப்பங்களிலும் கூட அதனால் பூமிக்கு ஏற்படக்கூடிய தாக்கம் உணரக்கூடியதாக இருக்காது. 1962 ல் இவ்விதம் பாரிய விண்கோள்களின் இணைப்பு இடம்பெற்றது. அதுபோன்று 1982ஆம் ஆண்டிலும், 2000ஆம் ஆண்டிலும் இவை ஏற்பட்டன. ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும் பூமியும், சூரியனும் அண்டவெளியில் ஒரே திசையில் ஒன்றிணைவதுண்டு. இது வருடாவருடம் இடம்பெறும் நிகழ்வாகும்.
கேள்வி: விண்கோள்கள் ஒன்றிணைவது பற்றி மேலதிக தகவல்கள் இருக்கின்றனவா?
பதில்: விண்கோள்கள் விண்வெளியில் அமைந்திருக்கும் ஸ்தானங்கள் 2012 டிசம்பருக்குப் பின்னர் மாற்றமடையலாம் என்று சில கருத்துக்கள் நிலவுகின்றன. என்னைப் பொறுத்த மட்டில் ஒரு நல்ல புத்தகத்தை அல்லது ஒரு திரைப்படத்தை பார்த்து மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். என்றாலும் தொலைக்காட்சி சேவைகள், திரைப்படங்கள் ஆகியன விஞ்ஞானத்தின் அடிப்படையிலேயே அறிமுகம் செய்யப்பட்டன.
கேள்வி: நிபுரு அல்லது எக்ஸ் விண்கோள் அல்லது ஈரிஸ் என்று அழைக்கப்படும் மண்ணிறத்திலான குள்ளமான விண்கோள் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறதா? இது பூமியில் அனர்த்தங்களை ஏற்படுத்துவதற்கு எமக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா?
பதில்: நிபுரு மற்றும் ஏனைய விண்கோள்கள் பற்றிய செய்திகள் இணையத்தளங்கள் கற்பனையில் எழுதி உங்களை ஏமாற்றும் பொய்யான தகவலாகும். இவற்றை விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த தசாப்தத்தில் அவதானித்துள்ளார்கள். இது இப்போது நாம் வெறுமனே எங்கள் கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்கும். ஆனால் அப்படியான ஒரு விண்கோள் உண்மையிலேயே இல்லை. ஆயினும் ஈரிஸ் உண்மையான விண்கோள் ஆகும். இது புளூட்டோ விண்கோளைப் போன்று ஒரு குள்ளமான சிறிய விண்கோள் ஆகும். இது சூரியமண்டலத்துக்கு அப்பால் இருக்கும் ஒரு விண்கோள் ஆகும். இது பூமியிலிருந்து நான்கு பில்லியன் மைல் தொலைவில் இருக்கின்றது.
கேள்வி: துருவங்கள் மாறும் சித்தாந்தம் என்றால் என்ன? பூமி 150 பாகையிலேயே தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருக்கின்றது. இதன் மையம் பல நாட்களில் அல்லது மணித்தியாலங்களில் தன்னைத்தானே சுற்றக்கூடியதாக இருக்கிறதா?
பதில்: பூமி தன்னைத்தானே சுற்றுவதில் மாற்றம் ஏற்படுவது அசாத்தியமாகும். பூமியிலுள்ள கண்டங்கள் சிறிதளவு அசைவு ஏற்படுவது ஏதோ உண்மைதான். வடதுருவம் ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்தது. அதை வைத்துக்கொண்டு வடதென் துருவங்களின் நிலை மாற்றமடையும் என்று கூறுவது தவறு. பல இணையத்தளங்கள் இத்தகைய செய்திகளை வெளியிட்டு மக்களை முட்டாள்களாக்குகின்றன.
இந்த இணையத்தளங்கள் பூமி தன்னைத்தானே சுற்றுவதிலும், பூமியிலுள்ள புவியீர்ப்பு சக்திக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக கூறுகின்றன. இந்த புவியீர்ப்பு சக்தி வழமையாக மாறுவ தில்லை. புவியீர்ப்பு சக்தி சராசரியாக ஒவ்வொரு நான்கு இலட்சம் வருடங்க ளுக்கு ஒருதடவையே மாற்றமடைவதுண்டு. எனவே, நாங்கள் அறிந்த அளவுக்கு இத்தகைய புவியீர்ப்பு சக்தியின் பின்வாங்கல் பூமியிலுள்ள உயிரினங்களுக்கு அடுத்த பல ஆயிரம் ஆயிரம் வருடங்க ளுக்கு மாற்றமடையப் போவதில்லை.
கேள்வி: 2012 பூமி அழிவடையும் என்ற கருத்துக் குறித்து நாசா விஞ்ஞானிகள் என்ன நினைக்கிறார்கள்?
பதில்: இதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. இவை அனைத்துமே கற்பனையில் உருவாகிய கட்டுக்கதைகளாகும். இந்தக் கற்பனைக் கதைகளை மையமாகவைத்து சிலர் நூல்கள், திரைப்படங்கள், விபரண சித்திரங்கள் ஆகியவற்றை அல்லது இணையத்தளத்தில் செய்திகளை வெளியிடுகிறார்கள்.
கேள்வி: 2012ல் சூரியமண்டத்திலிருந்து ஏற்படக்கூடிய பாரிய சூரிய சூறாவழிகளினால் எமக்கு ஆபத்து ஏற்படுமா?
பதில்: சோளார் செயற்பாடுகள் சுழற்சியாக வழமையாக இடம்பெறுவதுண்டு. 11 வருடங்களுக்கு ஒருதடவை இது உச்சகட்டத்தை அடையும். அத்தகைய காலகட்டத்தில் சூரிய மண்டலத்திலிருந்து நெருப்புக்கதிர்கள் வெளியாவதுண்டு. இவை செய்மதி தொலைத்தொடர்புக்கு தீங்கிளைப்பதற்கான வாய்ப்பு உண்டு.
இப்போது எமது விஞ்ஞானிகள் செய்மதி தொலைத்தொடர்பை இதிலிருந்து பாதுகாப்பது பற்றி ஆய்வுகளை நடத்தி வருகின்றார்கள். ஆயினும் 2012ஆம் ஆண்டுக்கும் இதற்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை. அடுத்த சூரியகதிர்கள் 2012, 2014ஆம் ஆண்டில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இவை பூமியின் வரலாற்றில் வழமையாக இடம்பெறும் நிகழ்வுகளாகும்
நன்றி - http://www.tamilcnn.org/archives/111756.html
                 http://www.nasa.gov/

செவ்வாய், 18 டிசம்பர், 2012

நாடெங்கும் அடை மழை! வடக்கு கிழக்கு உட்பட பத்து மாவட்டங்களில் இயல்புநிலை பாதிப்பு! 11 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழையின் காரணமாக வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களிலும் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களில் 11 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் சீரற்ற காலநிலை காரணமாக, ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இக்கடும் மழை காரணமாக மாத்தளை, ரத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் ஐவரும் கண்டி, பாததும்பரையில் ஒருவருமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் நால்வர் மண்சரிவு காரணமாகவும் ஒருவர் வெள்ள நீரைப் பார்த்ததால் ஏற்பட்ட இதய அழுத்தம் காரணமாகவும் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இக்கடும் மழை காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, காலி, பொலன்னறுவை, புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இம்மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக ஏழு மாவட்டங்களில் 1129 குடும்பங்களைச் சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
அதேநேரம் இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டவர் களில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 3021 பேர் 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 66 வீடுகள் முழுமையாகவும் 695 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்திருப்பவர்களுக்கும் உடனுக்குடன் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவென தேவையான நிதி மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
இதேவேளை மழை தொடராகப் பெய்து வருவதால் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் 24 மணி நேர மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி குமாரி வீரசிங்க கூறினார்.
இந்நான்கு மாவட்டங்களிலும் பல பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை கருத்திற் கொண்டே இம்முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை அவர் கண்டி மாவட்ட நிலைமை தொடர்பாக மேலும் கூறுகையில், நேற்று முன்தினம் முதல் பெய்த கடும் மழை காரணமாக அக்குரணைப் பிரதேசத்தில் சுமார் 8 அடிகளுக்கு வெள்ள நிலைமை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 150 க்கும் மேற்பட்ட கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேநேரம், மாத்தளை மாவட்டத்திலுள்ள ரத்தொட்ட பிரதேசத்தில் மண்சரிவினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஐவருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய்ப்படி இறுதிக் கிரியைகளுக்காக கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதேசத்தில் 225 லயன் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதை குருநாகல் மாநகர முதல்வர் காமினிபெர முனகே மற்றும் மாநகர சபை உறுப்பினர் தியாகராஜா சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக குருநாகல் இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யுமாறு பணிப்புரை விடுத்ததோடு இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி - குருநாகல் வீதியின் பல இடங் களில் வீதிக்கு மேலால் வெள்ளம் பாய்ந்து செல்வதால் வாகனப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.




காலநிலை சீர்கேட்டால் 9 பேர் பலி!
நாட்டில் பரவலாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எட்டு மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள காலநிலை சீர்கோடு காரணமாக 9 போர் மரணமாகினர்.
கடும் மழை காரணமாக மாத்தளை, கண்டி, மற்றும் நுவரெலிய பகுதிகளில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல், கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, காலி, பொலன்னறுவை, புத்தளம் உள்ளிட்ட பல மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 229 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 432 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், 735 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 21 பேர், 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
86 வீடுகள் முற்றாகவும், 495 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதனிடையே,நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் என்று காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

வானிலிருந்து மர்மப்பொருள் விழுந்தால் தொடவேண்டாம்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை


வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் ஏதாவது பூமியை நோக்கி விழுந்தால், அப்பொருட்களை தொடவேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வானிலிருந்து விழும் மர்மப் பொருட்களில் அமிலங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் காணப்படக்கூடும் என்றும் அதனால் அவற்றைத் தொடுவதால் சிலவேளை ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் அவ்வாறான பொருட்களை யாராவது கண்டெடுத்தால், அதனை கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள மருத்துவ பரிசொதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 29 நவம்பர், 2012

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்



பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப ்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும் .
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

(via :- பெட்ருமாஸ் லைட்டேதான் வேணுமா ?)

ஞாயிறு, 25 நவம்பர், 2012

உண்மையான ஏழை


ஒரு பணகாரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்க கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்து சென்று இரு தினங்கள் தங்கிவிட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான் :

அப்பா நம் வீட்டில் ஒரே ஒரு நாய் இருக்கிறது கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன.......,
நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம் அந்த கிராமத்தில் எண்ணில் அ
டங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது......, நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது......, நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம் அவர்கள் உடனடியாக சூடு மாறாத பாலை கறந்து சாபிடுகிரர்கள்...., நாம் வாடிய காய்கறிகளை சாப்பிடுகிறோம் அவர்கள் செடியில் இருந்து பறித்து பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிர்றார்கள் ......., நாம் வீட்டை சுற்றி compound கட்டி பாது காக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிகொண்டே சென்றான்....மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது....
தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று.....!!!

வியாழன், 22 நவம்பர், 2012

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன ?



ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி
என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ''என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.

ஞானி, '
'எங்கே உன்னைக் கவர்ந்த
உயரமான செடி? ''என்று கேட்டார்.

சீடன் சொன்னான், 'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.

இன்னும் உயரமான ரோஜாச் செடிகள்
தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான
ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.

' புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''

பின்னர் ஞானி,''சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய
காந்திச் செடியா? ''சீடன் சொன்னான், 'இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை
விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.

நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகுஇதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'

இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்

சே குவேரா தன் மனைவிக்கு எழுதிய கடிதம்*.



அன்பிற்குரியவளே..!
உன்னை பிரிந்து போவது வருத்தமாகத்தான் இருக்கிறது.என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் உயரிய செயலுக்காக தியாகங்கள் செய்ய விரும்பிகிற இந்த மனிதனை நீ அறிவாய்.

உள்ள-திடத்தை இழந்து விடாதே. ஒரு வேளை, நான் இறந்து போனால்,என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டு செல்லும் பணியை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களை கண்டு நம்மை போலவே அவர்களும் சினம் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

காலமும் தூரமும் நம்மை பிரித்தாலும்,எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன்,என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டு பிரிகிறோம் என்றுஎண்ணும்போது வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களை சுரண்டும் எதிரிகளுடன்தான் போரிட சென்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது.

உன் உடல் நல்த்தையும் கவனமாக பார்த்துக் கொள். குழந்தைகளைக் கவனித்துக் கொள்.என் தாய் நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாக பெற்றதையும் எண்ணி பெருமைப்படுகிறேன்.

''இந்த போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதி தருணத்தில் உன்னை பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்....

இது போதும் எனக்கு - வைரமுத்து

அதிகாலை ஒலிகள் ஐந்துமணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் இதுப...